அகராதி
Monday, November 11, 2013
கூடு
காலியான
பறவை கூட்டில்
எஞ்சிய
சிறகுகளாய்
உன் நினைவுகள்.
Thursday, October 17, 2013
காலம்
அடுத்த நொடியை
அறிய உதவும்
சூத்திரத்தை,
எழுதி முடிக்கும் முன்
எதிர்காலம்
இறந்தகாலமானது.
இறந்த காலம் :
பிழையான கட்டுரை.
எதிர்காலம் :
எழுதப்படாத கவிதை.
இறந்த காலம் :
எதிர்காலத்திற்கான கணக்கு.
எதிர்காலம் :
சூத்திரம் இல்லா சமன்பாடு.
Wednesday, August 14, 2013
பயம்
படைத்த
கடவுளை விட
அழிக்கும் கடவுளிடம்
இருக்கும்
பக்தியில் தெரிகிறது,
மனிதனின் பயம்.
Tuesday, August 13, 2013
காதல்
இரைச்சலற்ற
ஆழ்கடலாய்
என்
காதல்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)