Thursday, October 17, 2013

காலம்




அடுத்த நொடியை  
அறிய உதவும் 
சூத்திரத்தை, 
எழுதி முடிக்கும் முன் 
எதிர்காலம் 
இறந்தகாலமானது.

இறந்த காலம் : 
பிழையான கட்டுரை.
எதிர்காலம் :
எழுதப்படாத கவிதை.

இறந்த காலம் :
எதிர்காலத்திற்கான கணக்கு.
எதிர்காலம் :
சூத்திரம் இல்லா சமன்பாடு.