Friday, October 14, 2011

புன்னகை


விண்ணில்
நட்சத்திரங்கள் துளிர்த்தது.
மண்ணில்
நீ புன்னகையை
சிதற விட்டத்தினால்..
 

Wednesday, July 27, 2011

அழகு

நீ என் 
தாய்மொழியில்  
பேச முற்படும் 
போது  
எல்லாம் 
உன்னால் 
என் தமிழ் அழகும்,
என் தமிழால்
உன் அழகும்,
மெருகேறுகின்றன...

Sunday, July 3, 2011

புனிதம்...


மண்ணை
நெருங்கும் முன் 
மழைத்துளியும்,
மனிதனும்  
புனிதமே...

Sunday, June 26, 2011

இயல்பு..


கடலும், பெண்களும்
ஒன்று
தான்
இரண்டும்
உயிர் உள்ள
நம்மை
உள்ளே இழுத்து,
உயிர் அற்ற
பொருட்களாய்
வெளியே
தள்ளி விடும்...

Sunday, May 8, 2011

NH


ரோட்டின்
ஓரங்களில் இருந்த
மரங்களை வெட்டி
ரோட்டின்
நடுவே செடிகளாக
நடப்பட்டது...
தேசிய நெடுஞ்சாலை.

Sunday, May 1, 2011

பயணம்

நிற்பதை விட
நடப்பது மேல்..


தேங்கி நிற்க
நான்
குட்டை அல்ல..


என் பயணங்கள்
என்றும்
நிற்பதும் இல்லை.

Monday, April 25, 2011

நினைவுகள்

ஒவ்வொரு நிமிடமும்
நினைத்துக்
கொண்டே இருக்கிறேன்..
மறக்க வேண்டிய
நிமிடங்களை...


மறக்க நினைக்கும்
எல்லா நினைவுகளும்
அந்த பொழுது
நினைவுட்டப்படுகின்றன.

Saturday, April 9, 2011

நம்பிக்கை


நாளை
இந்த
சமுகத்தின்
தலை எழுத்தை
திருத்தும்..











என் விரலில்
இடம்பெறப் போகும்
அந்த ஒற்றை
மைத்துளி.

Friday, March 4, 2011

எல்லோருக்கும் உண்டு எல்லை..



நாட்டின் எல்லை
கோட்டில் முடிகிறது.

மனிதனின்
எல்லை அவன்
வீட்டோடு
முடிகிறது.

எல்லைகள்
இல்லாதவன் இருப்பானாயின்
அவன் இருப்பிடம்
இல்லாதவனாகவே
இருப்பான்.

இல்லங்கள்
பெருக பெருக
இல்லாதவனின் எல்லையும்
குறைகிறது.

இறைவா..
நித்தமும் தவம்
செய்து வேண்டுவேன்
உன்னை

"இல்லங்கள் இல்லா
 உலகம் வேண்டும்.
உலகமே
ஒரே இல்லமாய்
மாறிடல்  வேண்டும்..."

Sunday, February 13, 2011

நான்...

ஊரில்
விவசாயம்
பார்க்காமல்
நகரம் வந்தவன்
நான்..

 என்னை FACEBOOK–ல்
 FARMVILLE
விளையாட அழைக்கிறார்கள்
.

நான்
புதுமையை
விரும்பினேன்.
 

ஆனால்,
நான் புரட்சிக்காரன்
அல்ல.


எனக்கு
புரட்சியும் வேண்டாம்,
ஒரு வெங்காயமும் வேண்டாம்.

 புரட்சி 

ஏழைகளுக்கானது,
வெங்காயம் 

பணக்காரனுக்கானது .

இரண்டாலும்
ஆட்சியை 

வேண்டுமானாலும்
மாற்றலாம்.

 ஆனால்,
இங்கே
மனிதனின்
மாற்றமே
தேவைப்படுகிறது.

அம்மணம் ஆன
ஊரில்
கோவனம்
காயாது.

சுயநலவாதி
என்பாய்..
இருந்து 

விட்டுப்போகிறேன்.

எனக்கு
யாரையும்
இழக்கவும் 

விருப்பம் இல்லை,
எதையும்
அடையவும் 

விருப்பம் இல்லை.

நான்
பொது வாழ்க்கையை
விரும்பவில்லை,
பொதுவான
வாழ்க்கையை
விரும்புகிறேன்,
எல்லோருக்கும்மாக....

Friday, February 11, 2011

வங்க கடல்..

வங்க கடலில்
கங்கை 
மட்டும் அல்ல..

எங்கள் பெண்டிரின்
கண்ணீரும்,
எங்களது இரத்தமும்
கலக்கிறது.

மனிதனின் 
மனம்
கருப்பானதால்

கடலின்
நிறம்
சிவப்பாகிறது.

Thursday, February 10, 2011

DEAD SEA

கடற்கரையில்
கால் நனைக்க
தயங்குகிறேன்.
அலைகள் எல்லாம்
இரத்தம்.

வங்க கடலில்

 அங்கங்கள் மிதக்கின்றன
.

மீன்கள் இறந்ததால்
அங்கே..
மீனவர்கள் இறப்பதினால்
இங்கே..

வெகு அருகில்
மற்றொரு 
"DEAD SEA

Sunday, January 30, 2011

புதையலைத் தேடி ...

உறக்கம்
வராத
இரவுகளில் கூட
உறங்கச்செல்கிறேன்
புதைந்த
 உன் 

நினைவுகளைத் தேடி...

Saturday, January 29, 2011

காந்திய ‘வியாதி’

காந்தியடிகளிடம்
இருந்து
நாங்கள்
அஹிம்சையை 
அதிகமாக 
கற்றுக்கொண்டோம்.

600 பேர் இறந்தும் 
இன்னும்
அமைதியாக 
இருக்கிறோம்.

நாங்கள்
காந்தியவாதிகள்...

Thursday, January 13, 2011

உழவர் தினம்

 
உண்ண
உணவு இல்லாமல்
உழவன்
இருக்கையில் 
நான் மட்டும்
எப்படி
கொண்டாடுவேன் 
உழவர் தினத்தை ?

Tuesday, January 11, 2011

உழவன்

விளை நெல்லுக்கு
விலை பேச 
முடியாதவர்,
எலிக்கறி தின்கிறார்,
இன்று...

தன் பண்டிகையை
நமக்கு
விடுமுறையாக
தந்து விட்டு
ரேஷனில்
கையேந்தி நிற்கிறார். 

அவருக்கும் சேர்த்து
பாடினேன்
"பொங்கலோ பொங்கல்”

உங்களுக்கும்
கூறுகிறேன்
"Happy Pongal" 
என்று...


Wednesday, January 5, 2011

நீயும்.. நானும்...

இலையுதிர்
காலத்தில் 
எல்லாம்
இலை 
உதிர்வதை
ரசித்தேன்..


இன்று
நீ
பிரியும் போது
உணர்கிறேன்,
அந்த
மரத்தின் வலியை...

Tuesday, January 4, 2011

சந்திப்பிழை

சந்திப் பிழைகளை
எழுத
நினைத்த
என்
எழுத்துக்களிலும்
அதே பிழை....