Tuesday, December 21, 2010

ஒதுக்கப்பட்டவன்

கொடியேற்றத்துடன்
ஊருக்கு உள்ளே
வேதம் முழங்க
ஆடல் கடவுளுக்கு
அழகாக
தொடங்கியது திருவிழா .

ஊருக்கு வெளியே
ஒதுக்கப்பட்டவர்களுக்காக

ஆயுதம் ஏந்தி
போராடினார்
அதே கடவுள்
அய்யனாராக .

No comments:

Post a Comment